முகப்பு

நுழைவுப் படிவம்Captcha plugin for Joomla from Outsource Online
 
தெனும - நெனன்சல சமூகத்திற்கான இணைய நுழைவாயில்
நாவலரின் வாழ்வில் PDF அச்சிடுக மின்னஞ்சல்
S.தான்யா குமாரி ஆல் எழுதப்பட்டது   
சனிக்கிழமை, 27 பெப்ரவரி 2010 14:04

நாவலரின் வாழ்வில்

திருக்குறள் பரிமேலழகருரை, திருக்கோவையாருரை, சேதுபுராணம் முதலிய இலக்கியங்களும், இலக்கணக் கொத்து, இலக்கண விளக்க சூறாவளி, தருக்க சங்கிரகம் முதலிய இலக்கண தருக்க நூல்களும் ஆறுமுக நாவலரின் ஆய்விலும், பார்வையிலும் அச்சிடப்படிவதற்குரிய ஏற்பாடு செய்தவர் முகவை பொன்னுச்சாமித் தேவர். இந்நூல்கள் ஆறுமுக நாவலரால் பதிக்கப் பெற்று வெளி வந்தபோது, அவற்றைப் பெற விரும்பி, தமிழக முழுவதுமிருந்து புலவர்களும், பயிலும் மாணவர்களும் பாடல்கள் மூலம் பொன்னுச்சாமித் தேவரை வேண்டி எழுதி விண்ணப்பித்தனர். அனைவருக்கும் அஞ்சல்செலவு உட்பட இலவசமாக அனைத்து நூல்களையும் அனுப்பி வைத்தார் தேவர். வேண்டி விண்ணப்பித்த பாடல்கள் யாவும் தொகுக்கப் பெற்று 'பல கவித்திரட்டு' என்ற தலப்பில் உருவாக்கம் செய்து வெளியிடப் பெற்றன.

நாவலர் பெருமானின் நூல்களைப் பதிப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, நாள்தோறும் பொன்னுச்சாமித் தேவர் பதிப்பிக்க உள்ள நூல்களை ஒருமுறை பார்த்து, சில திருத்தங்களைச் சொல்வதை வழக்கமாக் கொண்டிருந்தாராம் தேவர். இத்தகைய குறிக்கீட்டை விரும்பாத ஆறுமுக நாவலர் வருந்துவதறிந்த தேவர், சில நாள்கள் நாவலர் பக்கமே செல்வதில்லையாம். தேவர் வருகை தராத காரணத்தைப் புரிந்து கொண்ட நாவலர், தேவரிடம் சென்று "தமிழ் வருகை தராததால் பதிப்புப் பணி வளரவில்லை!" என்றாராம். அதன் பின்னர், நாவலரை நாள்தோறும் சந்திப்பதை நாள்வழிப் பணியாக்கிக் கொண்டாராம் முகவை பொன்னுச்சாமித் தேவர்.

A.ராதா கிருஸ்ணன்

 

வியாழக்கிழமை, 01 ஜூலை 2010 19:13 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 

கற்றல்

dahamsaura


Vidunene


goviyaஆரோக்கியம்

Happy life


firstaider

 

வணிகம்

business

இணைப்பில் உள்ளவர்கள்

எங்களிடம் 3 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்